தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமாவளவனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்: பாஜக முக்கியத் தலைவர்கள் கைது! - திருமாவளவனை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்: திருமாவளவனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் நடத்தவிருந்த போராட்டத்தை தடுக்கும் வகையில் அக்கட்சியின் முக்கியத் தலைவர்களை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

திருமாவளவனை கண்டித்து ஆர்ப்பாட்டம்: பாஜக முக்கிய தலைவர்கள் கைது!
Bjp protest against Thirumavalavan

By

Published : Oct 27, 2020, 4:02 PM IST

இந்து மத பெண்கள் குறித்த விசிக தலைவர் திருமாவளவனின் பேச்சுக்கு பாஜக, சிவசேனா, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துவருகின்றன.

மேலும் திருமாவளவனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் பாஜகவினர் இன்று (அக்.27) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதற்கிடையில் விழுப்புரத்தில் இன்று (அக். 27) மாலை திருமாவளவனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் போராட்டத்தைத் தடுக்கும்பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் வி.ஏ.டி. கலியவரதன், பொருளாளர் சுகுமார், விவசாய அணி தலைவர் அசோக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details