தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஹலோ பிஜேபிக்காரங்களா?' - 'போன் காலால்' நொந்த பாஜகவினர் புகார் - bjp

பிரதமர் மோடி, அமித் ஷா, ஹெச். ராஜா, ஆகியோரை இழிவாகப் பேசிய அடையாளம் தெரியாத நபர் மீது மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் பாஜக தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

bjp
bjp

By

Published : Feb 17, 2020, 6:31 PM IST

கள்ளக்குறிச்சி நகரின் பாஜக தலைவராக சர்தார் சிங் என்பவர் இருந்து வருகிறார். குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவரப்படும் சூழ்நிலையில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சர்தார் சிங்கிற்குப் போன் செய்து கடந்த மாதம் அவரையும், பாஜக கட்சியையும் தவறாக விமர்சித்து பேசியதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அதேநபர் நேற்றும் அதற்கு முந்தைய இரண்டு நாட்களிலும் சர்தார் சிங்கிற்குப் போன் செய்து, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிறகு, பிரதமர் மோடி, அமித்ஷா, ஹெச். ராஜா ஆகியோரை இழிவாகப் பேசி, சர்தார் சிங்கிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜகவினர், அக்கட்சியின் மாவட்டத் தலைவர் பாலசுந்தரம் தலைமையில், அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரனிடம் புகார் மனு அளித்தனர். அதில், பிரதமர் மோடி, அமித்ஷா, ஹெச். ராஜா மற்றும் பாஜகவை இழிவுபடுத்தி பேசியதோடு மட்டும் இல்லாமல் நாட்டின் இறையாண்மைக்கு எதிராகப் பேசி, இந்து மதத்தை கேவலமாகப் பேசிய அந்த நபர் மீது உரிய நடவடிக்கையும் விசாரணையும் மேற்கொண்டு, இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

பாஜகவினர் புகார்

மேலும் அவர் பேசிய ஆடியோ சிடி, ட்ரூ காலர் இமேஜ் ஆகியவற்றையும் காவல் துறையிடம் சமர்ப்பித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியின்போது கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜகவினர் ஏராளமானோர் உடனிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details