விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே தேவபாண்டலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் மருத்துவர் அண்புமணி ராமதாஸ் பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மாநில துணை பொதுச் செயலாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பசுமை இந்தியா என்ற நோக்கத்தில் பள்ளி மாணவர்களுடன் இணைந்து மரக்கன்றுகள் நட்டனர்.
அன்புமணி ராமதாஸ் பிறந்த நாள்- மரக்கன்றுகள் நட்டு கொண்டாட்டம் - அன்புமணி ராமதாஸ்
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அருகே மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளையொட்டி பாமக இளைஞர் அணி நிர்வாகிகள் அரசுப் பள்ளியில் பள்ளி மாணவர்களுடன் இணைந்து மரக்கன்றுகள் நட்டனர்.
அன்புமணி ராமதாஸ் பிறந்த நாளில் மரக்கன்றுகள் நட்ட நிர்வாகிகள்
இதில் அரச மரம், ஆல மரம், வேப்ப மரம், புங்கமரம் உள்ளிட்ட ஏராளமான மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் சரவணன் , மாநில வன்னியர் சங்க துணைத் தலைவர் நாராயணன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தமிழரசன், நிர்வாகிகள் ஆகியோர் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: சிறுத்தையிடம் துணிச்சலுடன் செயல்பட்ட சிறுமிக்கு அரசு விருது!