விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூர் வரை உள்ள இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது. இதனால், இந்தச் சாலையில் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில், இன்று விழுப்புரத்திலிருந்து கடலூர் நோக்கிச் சென்ற டிப்பர் லாரி, பஞ்சமாதேவி எனும் இடத்தில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
பைக் மீது டிப்பர் லாரி மோதி இருவர் பலி! - bike accident
விழுப்புரம்: வளவனூர் அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
![பைக் மீது டிப்பர் லாரி மோதி இருவர் பலி!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3610450-thumbnail-3x2-viluppuram.jpg)
இருவர் பலி
இதில் இருசக்கர வாகனத்தில் வந்த நாகம்மாள்(50), நந்தினி(4) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து வளவனூர் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.