விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த குப்பைகளை மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்த பெண்கள் மூன்று சக்கர வாகனங்கள் மூலமாக வீடு வீடாக சென்று எடுத்து வருகின்றனர்.
குப்பைகளை சேகரிக்க பேட்டரி ஆட்டோக்கள் - கலக்கும் கள்ளக்குறிச்சி நகராட்சி - kallakurichi municipality
விழுப்புரம்: சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் குப்பைகளை சேரிக்க கள்ளக்குறிச்சி நகராட்சியில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 27 பேட்டரி ஆட்டோக்கள் இயக்கப்படவுள்ளன.
மேலும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் பேட்டரி ஆட்டோக்கள் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக சோதனை ஓட்ட முறையில் ஆறு பேட்டரி ஆட்டோக்கள் மட்டும் குப்பை சேகரிக்க பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் தற்போது மீதம் உள்ள 21 பேட்டரி ஆட்டோக்களையும் விரைவில் செயல்படுத்த உள்ளதாக நகராட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பேட்டரி ஆட்டோக்களை இயக்குவதன் மூலம் சுற்று சூழல் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும். மேலும் இந்த ஆட்டோக்களில் குப்பைகளை ஏற்றி கொண்டு அதிக வேகத்தில் செல்ல முடியாது என்பதால், குப்பைகள் சாலைகளில் சிதறாமல் எடுத்துவர முடியும் என்றும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.