தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விழுப்புரம் அருகே எல்லீஸ்சத்திரம் தடுப்பணைக்கட்டில் அரிப்பு - வெளியான காணொலி - தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம்

விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள எல்லீஸ்சத்திரம் தடுப்பணைக்கட்டின் கரையோரப்பகுதிகளில் அரிப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 31, 2022, 9:53 PM IST

விழுப்புரம்:சாத்தனூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட நீரின் அளவு அதிகமாக உள்ளதால், தென்பெண்ணை ஆற்றில் குறுக்கே உள்ள எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டின் கரையோரப் பகுதிகளில் இன்று (ஆக.31) உடைப்பு ஏற்பட்டு மிகப்பெரிய பள்ளங்கள் உண்டாகின. இதனால், விழுப்புரம்-ஏனாதிமங்கலம் இடையேயான சாலை முற்றிலும் நீரால் சூழப்பட்டுள்ளது.

மேலும் எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டின் கரையோரப்பகுதிகள் உடைந்து ஆற்றில் கலப்பதை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆபத்தை உணராமல் கண்டு வருவதால் அங்கு பாதுகாப்புப்பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கரையோரப்பகுதிகள் உடையும் காணொலி சமூக வலைதளங்களில் அதிகளவு பரவி வருகிறது.

விழுப்புரம் அருகே எல்லீஸ்சத்திரம் தடுப்பணைக்கட்டில் அரிப்பு - வெளியான காணொலி

முன்னதாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வைகை அணையிலிருந்து நீர் திறப்பு... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details