விழுப்புரம் அருகேயுள்ள சிந்தாமணி பகுதியில் இந்தியன் வங்கி கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கணக்கு வைத்து பரிவர்த்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றிரவு இந்த வங்கியின் ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், பணம் மற்றும் நகைகள் இருந்த லாக்கரை உடைக்க முயன்றுள்ளனர்.
கொள்ளை முயற்சி நடந்த வங்கி ஆனால், லாக்கரை உடைக்க முடியாததால் அவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். இதனால் வங்கியில் இருந்த ரூ.80 லட்சம் பணம் மற்றும் இரண்டு கிலோ தங்க நகைகள் தப்பியுள்ளன.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.