தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை! விழுப்புரம் எஸ்.பி. எச்சரிக்கை

விழுப்புரம்: சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Viluppuram SP

By

Published : Mar 31, 2019, 7:46 PM IST

விழுப்புரம் அருகே உள்ள சொரப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் தமிழ்ச்செல்வன்(26). அதே பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவரின் மகன் ஹரிஷ்(17).

ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் மார்ச் 25ஆம் தேதிக்கு முன்பு, வேறு சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசி, அதனை வீடியோவாக பதிவுசெய்து டிக் டாக் (Tik Tok) வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக இவர்கள் இருவர் மீதும் வளவனூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழ்ச்செல்வன் மற்றும் ஹரிஷ் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட காவல் காண்காணிப்பாளர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

'பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் சமூக வலைதளங்களை நல்ல நோக்கத்துக்காக மட்டுமே பயன்படுத்தவும், கருத்துகளை பதிவிடவும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

சட்டம்-ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் நோக்கத்திலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில், இருவேறு சமுதாயத்தினரிடையே பிரச்னை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை வலைதளத்தில் பதிவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details