ஆரோவில் பகுதியில் புறகாவல் நிலையம் திறப்பு! - விழுப்புரம் மாவட்ட செய்திகள்
விழுப்புரம்: ஆரோவில் பகுதியில் குற்றச்சம்பவங்களை தடுக்க புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் உட்கோட்டம் ஆரோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொம்மையார்பாளைத்தில் விழுப்புரம் காவல் துறை துணைத்தலைவர் எழிலரசன் மேற்பார்வையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் புதியதாக புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது.
ஆரோவில், பொம்மையார் பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் கண்காணிக்கவும், சட்ட ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கவும் அப்பகுதியில் 5 (CCTV) கண்காணிப்பு கேமராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்.
மேலும் அப்பகுதியில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. அதுமட்டுமல்லாது மரக்கன்றுகள் நடப்பட்ட நிகழ்ச்சிகள் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.