விழுப்புரத்தை அடுத்த கீழ்பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவர் விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இவர் கடந்த 8ஆம் தேதி தனது பிறந்தநாளை சக நண்பர்களுடன் சேர்ந்து பட்டா கத்தியால் கேக்வெட்டி கொண்டாடினர். அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இதையடுத்து, கரோனா தொற்று காரணமாக மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில், தடை உத்தரவை மீறி சட்டவிரோதமாக ஆயுதத்துடன் ஒன்றுகூடியும், மற்ற நபர்களுக்கு கரோனா தொற்று பரவும் வகையில் பட்டா கத்தியை வைத்து கொண்டு பிறந்தநாளை கொண்டாடியது குற்றம் என்பதால், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு வழக்கறிஞர் பிரபு, அவரது நண்பர்கள் 5 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வழக்கறிஞர் கைது! - Attorney cutting birthday cake with a knife
விழுப்புரம்: விழுப்புரம் அருகே பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வழக்கறிஞர் உள்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பட்டா கத்தியால் கேக் வெட்டி வழக்கறிஞர்
இதையும் படிங்க:சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்ஸோவில் கைது!