விழுப்புரம் அருகே உள்ள தளவானூர் பகுதியைச் சேர்ந்தவர் கர்ணன். இவரது மனைவி நித்யா என்கிற சிவப்பிரியா (23). நித்யாவும், அதேபகுதியைச் சேர்ந்த அஞ்சலாட்சி என்பவரும் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென அப்பகுதியில் சூறாவளி காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
அப்போது திடீரென இடி தாக்கியது. இதில் நித்யா சம்பவ இடத்திலேயே பலியானார். ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய விசாலாட்சி மீட்கப்பட்டு அவருக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் ஒருகோடி பகுதியைச் சேர்ந்த, செல்வநாயகி என்பவரும் இடிதாக்குதலில் காயமுற்றார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.