விழுப்புரம்: கண்டாச்சிபுரம் அடுத்த பீரங்கிபுரம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், கடந்த அக்டோபர் மாதம் பள்ளி விடுமுறை நாளில் அதே கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் மாணவர் ஒருவர், வகுப்பறையின் கதவு மற்றும் ஜன்னல்கள் மீது கல்லை தூக்கிப்போட்டு உடைத்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஊர் நிர்வாகிகள் மாணவரை எச்சரித்தனர். அப்போது தான் குடிபோதையில் அவ்வாறு நடந்து கொண்டதாகவும், இனிமேல் அவ்வாறு நடந்து கொள்ளமாட்டேன் என்று கூறி தான் செய்த தவறுக்கு மாணவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. இதை பார்த்த மற்ற பள்ளி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த தகவல் கண்டாச்சிபுரம் காவல்துறையின் பார்வைக்கும் வந்துள்ளது.