விழுப்புரம் மாவட்டத்தில் ஆயுதப்படை பிரிவில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தவர் ஏழுமலை. இவர் காக்குப்பம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.
விழுப்புரத்தில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை! - விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ராதாகிருஷ்ணன்
விழுப்புரம் : ஆயுதப்படையின் இரண்டாம் நிலை காவலர் ஒருவர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
suicide
இன்று (ஆக. 16) காலை வீட்டிலிருந்த ஏழுமலை, திடீரென துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ். ராதாகிருஷ்ணன், அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். காவலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.