இதுதொடர்பாக அவர் இன்று (நவ. 17) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பலர் அரிய தொண்டாற்றிவருகிறார்கள். ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்திற்கான தங்களை இணைத்தும், அவர்கள் ஆற்றிவரும் அரிய தொண்டினைக் கருத்தில்கொண்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் அண்ணல் அம்பேத்கர் விருதினை தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான உயர்மட்ட குழு தேர்ந்தெடுத்து வழங்கிவருகிறது.
இந்நிலையில் இந்தாண்டு அண்ணல் அம்பேத்கர் விருதுக்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. இதற்கு, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த மக்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி நிலையை உயர்த்துவதற்கு முக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கைத் தரம் உயர பணிகள் மேற்கொண்டிருக்க வேண்டும்.