தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"முதலமைச்சர் மாநில இளைஞர் விருது" - விண்ணப்பங்கள் வரவேற்பு - young generation

சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் மாநில இளைஞர் விருது வழங்கப்படவுள்ளது என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

"முதலமைச்சர் மாநில இளைஞர் விருது" - விண்ணப்பங்கள் வரவேற்ப்பு
"முதலமைச்சர் மாநில இளைஞர் விருது" - விண்ணப்பங்கள் வரவேற்ப்பு

By

Published : May 11, 2023, 4:45 PM IST

விழுப்புரம்: தமிழ்நாட்டில் சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் வகையிலும் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் கடந்த 2015-ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று "முதலமைச்சர் மாநில இளைஞர் விருது" என மாவட்ட ரீதியாக தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவப்படுத்துகின்றது.

’’இந்த விருதிற்கு 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு என தகுதியுடையோருக்கு இவ்விருது வழங்கப்படுகின்றது. இளைஞர்களின் சேவைகளை கவுரவிக்கும் வகையில் பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கத்துடன் ரூ.1,00,000/- ரொக்கப் பணத்தை உள்ளடக்கியள்ளது.

அதன்படி 2023ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது, எதிர்வரும் 15.08.2023அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது. எனவே, இவ்விருதுகளைப் பெற தகுதியுடைய இளைஞர் மற்றும் இளைஞிகளின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. மேற்காணும் விருதிற்கான விண்ணப்பம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான www.sdat.tn.gov.in, http://www.sdat.tn.gov.in மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்.31.05.2023 அன்று மாலை 4.00 மணியுடன் நிறைவடைகிறது. முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கான விண்ணப்பிக்கும் தகுதிகளையும் இணைத்துள்ளது. அவை 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண்/பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். 01.04.2022 அன்று 15 வயது நிரம்பியவராகவும் மற்றும் 31.03.2023 அன்று 35 வயதுக்குள்ளாகவும் இருத்தல் வேண்டும்.

கடந்த நிதியாண்டில் (2022-2023) அதாவது 01.04.2022 முதல் 31.03.2023 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும்(சான்று இணைக்கப்பட வேண்டும்). விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். மேலும் மத்திய/மாநில அரசுகள், பொதுத் துறையில் பணியாற்றுபவர்கள், பல்கலைக்கழகங்கள்/கல்லூரிகள்/பள்ளிகளில் படிப்பவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.

விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 31.05.2023 அன்று மாலை 4.00 மணி ஆகும். மேற்கண்ட இவ்விருது தொடர்பாக இதர விவரங்களை www.sdat.tn.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்'' என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:"நிர்வாக காரணங்களுக்காகவே அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்" - முதலமைச்சர் ஸ்டாலின்!

ABOUT THE AUTHOR

...view details