தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜெருசலேம் பயணம் மேற்கொள்வதற்கு கிறிஸ்தவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்; மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன்! - application

விழுப்புரம் : ஜெருசலேம் பயணம் மேற்கொள்வதற்கு ஆட்சியர் அலுவலகங்களிலும், இணையதள முகவரியிலும் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ஜெருசலேம் பயணம் குறித்த செய்திக்குறிப்பை ஆட்சியர் இல.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ளளார்.

By

Published : Sep 11, 2019, 7:36 AM IST

விழுப்புரம் மாவட்டம், ஜெருசலேம் பயணம் மேற்கொள்ளுதல் தொடற்பாக மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவர் கூறியதாவது.

தமிழ்நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் 2019-20ஆம் ஆண்டின் ஜெருசேலம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழ்நாடு அரசால், நபர் ஒருவருக்கு ரூ 20ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் கிறிஸ்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தின்கீழ் அனைத்துப் பிரிவுகளை உள்ளடக்கிய 600 கிறிஸ்தவர்கள் புனிதப் பயணம் மேற்கொள்ள அனுமதித்து அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.


இப்புனித பயணம் இஸ்ரேல், எகிப்து, ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயாசமுத்திரம், கிறிஸ்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. இப்புனித பயணம் செப்டம்பர் 2019 முதல் மார்ச் 2020 வரை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயண காலம் 10நாட்கள் வரை இருக்கும்.

மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன்

இதற்கான விண்ணப்பப்படிவம் ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம். இது தவிற www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்துக்கான நிபந்தனைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு 30.9. 2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, புனித பயணம் செல்ல விருப்பமுள்ள பயனாளிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், உரிய இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் "கிறிஸ்தவர்களின் ஜெருசலேம் புனிதப் பயணத்துக்கான நிதியுதவி கோரும் விண்ணப்பம் 2019-20" என்று குறிப்பிட்டு ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல்தளம், சேப்பாக்கம், சென்னை - 600005 என்ற முகவரிக்கு 30.9.2019க்குள் கிடைக்கும் வகையில் அனுப்புதல் வேண்டும், நேரில் வரவேண்டியதில்லை.

மேலும், இது தொடற்பான விபரங்களுக்கு தொலைபேசி எண் 044- 28520033 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details