விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே அமைந்துள்ள ஆற்காடு கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட கிறிஸ்துவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அங்கு சுமார் 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்தோணியர் ஆலயம் ஒன்று உள்ளது. அந்த ஆலயத்தில் உள்ள அந்தோணியர் சிலையை கடந்த 19ஆம் தேதி இரவு மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் உடனடியாக அப்பகுதியினர் புகார் அளித்தனர்.