விழுப்புரம்:பெரியாரின் 144ஆவது பிறந்தநாளையொட்டி விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள அரசியல் பயிலரங்க வளாகத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன்பின் 1987ஆம் ஆண்டு இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது உயிர் நீத்தவர்களின் நினைவுத் தூண் முன்பாக மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழ்நாட்டில் மது இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலையை உருவாக்கியது தான் திராவிட மாடல். இந்த தலைமுறையை மது, போதை, சூது ஆகியவற்றிலிருந்து காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. அடுத்த தலைமுறையை காக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் தர வேண்டும். காலநிலை மாற்றத்தால் உலக நாடுகள் தற்போது வறட்சி மற்றும் இயற்கை பேரிடர் ஆகியவற்றை எதிர்நோக்கி வருகின்றன.