தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது - அன்புமணி ராமதாஸ் - அன்புமணி ராம்தாஸ்

திண்டிவனம் 104ஆவது வாக்குச் சாவடியில் அன்புமணி ராமதாஸ், அவரது குடும்பத்தினருடன் வந்து தனது வாக்கை பதிவுச் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு தற்போது வெற்றி நடை போட்டுக்கொண்டு இருக்கிறது எனத் தெரிவித்தார்.

anbumani ramdoss with family recorder his vote in viluppuram
anbumani ramdoss with family recorder his vote in viluppuram

By

Published : Apr 6, 2021, 9:28 PM IST

விழுப்புரம்: திண்டிவனம் 104ஆவது வாக்குச் சாவடியில் அன்புமணி ராமதாஸ், அவரது குடும்பத்தினருடன் வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.

பின்னர் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “கொலை, கொள்ளை, கற்பழிப்பு, குண்டார், நில அபகரிப்பு, பெண்களை சீண்டுதல் போன்றவை தலைதூக்க கூடாது. தமிழ்நாடு தற்போது வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இது தொடர வேண்டும்.

விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். இளைஞர்கள், மாணவர்கள், மீனவர்கள், நெசவாளர்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள், பெண்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். இந்த நிலை தொடர வேண்டும். கருத்துக் கணிப்பு என்பது தவறான முன் உதாரணம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் கருத்துக் கணிப்புகளை வெளியிடக்கூடாது.

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

அரசியலில் இருப்பவர்கள் ஆளுக்கு ஒரு தொலைக்காட்சி வைத்துள்ளதால் அவர்களுக்கு சாதகமாகத்தான் கருத்துக்கணிப்புகளை வெளியிடுவார்கள். எனவே இது கருத்துக் கணிப்பு அல்ல; கருத்துக்கணிப்பு என்றே பார்க்கப்படுகிறது” எனக் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details