விழுப்புரம்மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த செய்யாத்துவிண்ணான் ஏரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் எலும்புக்கூடாகக் கிடப்பதை அறிந்த விக்கிரவாண்டி காவல்துறையினர் எலும்புக்கூட்டைக் கைப்பற்றினர்.
இதனிடையே, அப்பகுதியில் யாராவது காணாமல் போனார்களா என்பது பற்றி விசாரித்தனர். இதில், அதே ஊரைச் சேர்ந்த ராமானுஜம் வயது 65 என்கிற கூலித்தொழிலாளி கடந்த ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி முதல் காணாமல் போன விவரம் விசாரணையில் தெரியவந்தது.