தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அடித்துக் கொலை: 4 பேர் கைது - மருத்துவக்கல்லூரி

விழுப்புரம்: முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

File pic

By

Published : Jun 7, 2019, 12:37 PM IST

Updated : Jun 7, 2019, 1:46 PM IST

விழுப்புரத்தை அடுத்த வடகுச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ். இவர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியற்றி வந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு (ஜூன் 6) மருத்துவக்கல்லூரி முன்பிருந்த துணிக்கடை ஒன்றில் துணி எடுக்கச் சென்றுள்ளார். அப்போது அந்த துணிக்கடை உரிமையாளரான முருகையன் என்பவருக்கும், தினேஷுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த தினேஷ் கடை உரிமையாளரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடை உரிமையாளர் முருகையன், தினேஷ் மீது விக்கிரவாண்டி காவல் நிலைத்தில் புகார் செய்துள்ளார். இதற்கிடையே தனது தந்தை தாக்கப்பட்டது குறித்து அறிந்த முருகையனின் மகன் ஆகாஷ் என்பவர் தனது நண்பருடன் சேர்ந்து தினேஷ் தாக்கி உள்ளார்.

இதில் படுகாயமடைந்த தினேஷ் சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்லும் வழியில் தினேஷ் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இருதரப்பைச் சேர்ந்த நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Last Updated : Jun 7, 2019, 1:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details