விழுப்புரம்: வளவனூர் அருகே உள்ள கொங்கம்பட்டு காலனியை சேர்ந்த வாய்பேச முடியாத மாற்றுதிறனாளி கார்த்திக். இவர் மேட்டுப்பாளையம் தென்பெண்ணையாற்றில் நேற்று (ஜன.16) குளிக்கச் சென்றுள்ளார். ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக கார்த்திக் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
அப்போது அந்த வழியாக சென்றவர்கள் சிலர், ஆற்றில் சடலமொன்று மிதந்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் உடலை மீட்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.