தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’கரோனா தடுப்புப் பணியில் அரசுக்கு ஒத்துழைப்பு தாருங்கள்’ - கே.டி.ராகவன் - கே.டி.ராகவன்

விழுப்புரம்: தமிழ்நாட்டில் கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் அரசுக்கு, அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பாஜக மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன் தெரிவித்துள்ளார்.

கரோனா களைய ஒத்துழையுங்கள்! கே.டி.ராகவன்
கரோனா களைய ஒத்துழையுங்கள்! கே.டி.ராகவன்

By

Published : Jun 17, 2020, 3:48 PM IST

விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன், "லடாக் எல்லையில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். எல்லையிலிருந்து ஒருபிடி மண்ணைக்கூட எதிரி நாட்டினர் எடுத்துச்செல்ல அனுமதிக்கமாட்டோம்.

கரோனா ஊரடங்கில் மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டுவருகிறது. தமிழ்நாட்டில் கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் அரசுக்கு, அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பயனுள்ள ஆலோசனைகளை வழங்கலாமே தவிர, எதிர்கட்சிகள் இந்த விவகாரத்தில் அரசியல் செய்யக்கூடாது.

பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டை பறிக்கும் செயலில் பாஜக ஈடுபடாது. இடஒதுக்கீடு பிரச்னைகளை களைய குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது" எனத் தெரிவித்தார்.

இறுதியாக, திரைத்துறையைச் சார்ந்த நடிகரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, கரோனாவால் உயிரிழந்த திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்காதது ஏன் என்ற கேள்விக்கு, ”மறைந்த திரைப்பட நடிகர் பிரதமருக்கு நன்கு அறிமுகமானவர் என்ற அடிப்படையில் இரங்கல் தெரிவித்தார்” எனக் கூறினார்.

இதையும் படிங்க:இந்திய ராணுவ வீரர்கள் மீதான தாக்குதலுக்கு சீனக் கொடிகயை கிழித்து கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details