சங்கரதாஸ் சுவாமிகள் காலத்தில்தான், கூத்து மரபிலிருந்து உருவாகி வளர்ந்த தமிழ் நாடக மேடைகள் பெட்டி அரங்க மரபிற்கேற்ப உருபெற்றன. தமிழ் நாடகத் தலைமையாசிரியர் என அழைக்கப்படும் இவர் சுமார் 40 நாடகங்களை எழுதியுள்ளார்.
தமிழ் நாடக மேடைகளுக்கு தன் உழைப்பின் மூலம் பெரும் பங்காற்றிய சங்கரதாஸ் சுவாமிகள், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தனது கலைச் சேவையை செய்தார்.
கடந்த நவம்பர் 13ஆம் தேதி இவரது நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பேருந்து நிலையத்தில் இன்று (டிச. 15) நாடக தந்தை நினைவுநாள் விழா நடைபெற்றது.