தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்த வாகன ஓட்டுநர்கள் சங்கம் தீர்மானம்! - வாகன ஓட்டுநர்கள் சங்கம்

கள்ளக்குறிச்சி: தனியார் கார், லாரி உள்ளிட்ட வாகன ஓட்டுநர்களின் பாதுகாப்பு கருதி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து தனியார் வாகன ஓட்டுநர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

all india driver association
all india driver association

By

Published : Jan 20, 2020, 12:24 PM IST

கள்ளக்குறிச்சி தனியார் மண்டபத்தில் அனைத்து தனியார் ஆட்டோ, கார், லாரி பேருந்துகள் ஓட்டுநர்கள் சங்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதுமிருந்து 800க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்துகொண்டனர்.

இதில், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் வழக்கறிஞர் சிவராமன் ஆகியோர் கலந்துகொண்டு சாலை விதிமுறைகளைக் கடைபிடிப்பது, தொலைதூரப் பயணங்களில் ஓட்டுநர்களின் இடர்பாடுகளை சமாளிப்பது, பொதுமக்களுக்கும் பயணிகளுக்கும் பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்வது உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கினர்.

தனியார் வாகன ஓட்டுநர்கள் சங்கக்கூட்டம்

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஓட்டுநர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் சாலை விதிமுறைகளில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் களைவது, நீண்ட தூரம் பயணம் செய்யும்போத ஓட்டுநர்களின் பாதுகாப்பிற்கு வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்துவது, சுங்கச்சாவடிகளில் ஏற்படும் இன்னல்களை களைவதற்கு அரசிடம் கோரிக்கை வைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையும் படிங்க: மத்திய மாநில அரசுகள் நதிகளை இணைக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details