புதுச்சேரி அருகே உள்ள கோட்டக்குப்பம் சோதனைச் சாவடியில் தலைமைக்காவலர் குமரன் தலைமையிலான காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியாக சென்னை நோக்கிவந்த சொகுசுக் காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர்.
புதுச்சேரியிலிருந்து காரில் மது கடத்திவந்தவர் கைது! - Villupuram
விழுப்புரம்: புதுச்சேரியிலிருந்து காரில் மதுபாட்டில்கள் கடத்திவந்த சென்னையைச் சேர்ந்தவரை கோட்டக்குப்பம் அருகே காவல் துறையினர் கைது செய்தனர்.
Alcohol seized
அப்போது அந்தக் காரில் விலை உயர்ந்த 204 மதுபாட்டில்கள் இருப்பது கண்டறியப்பட்டன. இது தொடர்பாக காரில் இருந்த நபரைப் பிடித்து விசாரித்ததில், அவர் சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கோபிநாத் என்பதும், புதுச்சேரியில் குறைந்த விலைக்கு மது பாட்டில்களை வாங்கி அதனை சென்னைக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து மது பாட்டில்களையும் சொகுசுக் காரையும் பறிமுதல் செய்த காவல் துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.