விழுப்புரம் மாவட்டம் நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பச்சையப்பன். இவரது மகன் முனியப்பன் மீது நகர காவல் நிலையத்தில் சாராயம் விற்பனை செய்ததாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் முனியப்பனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையிடம் பரிந்துறை செய்தார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.