உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கமும், விழுப்புர மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு சங்கமும் இணைந்து விழுப்புரத்தில் இன்று எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணியை நடத்தின. இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தொடங்கிய இப்பேரணியானது, நகரின் முக்கிய தெருக்களின் வழியாகச் சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தது. திருநங்கைகள், கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள், என 300க்கும் மேற்பட்டோர் இப்பேரணியில் கலந்துகொண்டு எய்ட்ஸ் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.