சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கு 4 ஆண்டுகள் சிறை! - Former AIADMK MLA Paramasivam
18:03 March 29
விழுப்புரம்: சொத்துக்குவிப்பு வழக்கில், முன்னாள் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர் பரமசிவத்திற்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில், முன்னாள் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பரமசிவத்திற்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.33 லட்சம் அபராதமும் விதித்து விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அபராதத் தொகை செலுத்தப்படவில்லையென்றால், கூடுதலாக ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பரமசிவம் 1991ஆம் ஆண்டும்ல் 1996ஆம் ஆண்டு வரை சின்ன சேலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார். அவர் மீது 1998ஆம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமான சொத்துக்குவிப்பு வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் 22 ஆண்டுகளாக நடைபெற்றுவந்தது. இந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:அதிமுக வசம் சேருமா கே.வி. குப்பம்?