தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் சார்பில் கள்ளக்குறிச்சி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் செந்தில்குமாரை, சி.வி.சண்முகம் அறிமுகம் செய்துவைத்தார்.
இதைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் பேசுகையில், "தலைமை அறிவிக்கும் வேட்பாளர்களுக்கு பணியாற்றுபவர்கள்தான் அதிமுகவின் உண்மையான விசுவாசி. மற்றவர்கள் எல்லாம் சந்தர்ப்பவாதி. அதிமுக மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் அயராது உழைத்து அதிமுக வேட்பாளரை வெற்றி பெற வைக்க பாடுபட வேண்டும்” என்று பேசினார்.