விழுப்புரத்தில் பாஜக தலைவர் வி.ஏ.டி. கலியவரதன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "விநாயகர் சதுர்த்தி பண்டிகை விவகாரத்தில் கட்சியின் மேலிடம் எடுக்கும் முடிவுக்கு விழுப்புரம் மாவட்ட பாஜக கட்டுப்படும். தடையை மீறி செயல்பட சொன்னாலும் நாங்கள் செயல்படுவோம்.
தமிழ்நாடு அரசு இந்துக்களுக்கு எதிராகவும், திராவிட கட்சி பாணியிலும், திமுகவை போலவும் மாறிவருகிறதோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இஸ்லாமியர்களின் பண்டிகைக்கு சலுகை வழங்குபவர்கள், இந்துக்களின் பண்டிகையை கிண்டல் செற்கிறார்கள்.