கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி, நேற்று சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து இன்று மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவருகின்றனர்.
மாவட்டத்தில் பொதுமக்களின் நலனைக் கருத்தில்கொண்டு பெரும்பாலான கடைகள், காய்கறி சந்தைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்திலிருந்து சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. புதுச்சேரி செல்லும் அரசு, தனியார் பேருந்துகள் முழுவதுமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இயல்புநிலைக்குத் திரும்பிய விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னதாக நிலுவையில் உள்ள வழக்குகளைச் சந்திக்கவருபவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுவருகிறது. மேலும், ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இவை ஒருபுறமிருப்பினும், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வண்ணம் அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்கள் தடையின்றி கிடைப்பதால் அம்மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: கரோனா: ஆடம்பரமின்றி எளிமையாக நடந்த 16 திருமணங்கள்