தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விக்கிரவாண்டியில் நாளை நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் - முதலமைச்சர் பங்கேற்பு! - admk muthamizhselvan vikravandi mla

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதிமுக சார்பில் நாளை நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

admk

By

Published : Nov 7, 2019, 4:42 PM IST

தமிழகத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றது. இதையடுத்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நவம்பர் 5ஆம் தேதி நாங்குநேரி தொகுதியில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அதைத்தொடர்ந்து, விக்கிரவாண்டி தொகுதியில் வெள்ளிக்கிழமை (நாளை) அதிமுக சார்பில் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.

நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை, வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், கே. ஏ. செங்கோட்டையன், எம்.சி. சம்பத், எஸ்.பி. வேலுமணி, கே.பி. அன்பழகன் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.


கூட்டத்தின் நிறைவில் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றிபெற்ற முத்தமிழ்ச்செல்வன் நன்றியுரை கூறவுள்ளார்.

இதையும் படிங்க: நவம்பர் 24இல் அதிமுக பொதுக்குழு கூட்டம் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details