தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கனியாமூர் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

கனியாமூர் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 18ஆம் தேதிக்கு விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

விழுப்புரம் மகளிர் நீதிமன்றம்
விழுப்புரம் மகளிர் நீதிமன்றம்

By

Published : Aug 10, 2022, 4:21 PM IST

கனியாமூர் பள்ளி மாணவி மர்மமான முறையில் இறந்த வழக்கு தொடர்பாக, அப்பள்ளியின் தாளாளர், செயலாளர், பள்ளி முதல்வர், வேதியியல் ஆசிரியை, கணித ஆசிரியை ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், பள்ளித் தாளாளர் உள்ளிட்ட 5 பேரும் தங்களுக்கு ஜாமீன் கேட்டு, தனித்தனியாக விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து, இன்று காலை 11.30 மணிக்கு, விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் மூன்றாவது முறையாக, இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை தொடங்கியது.

அப்போது, மாணவி மர்ம மரணம் குறித்து, சிபிசிஐடி போலீசார் பதிவு செய்த எப்ஐஆர் நகல் மற்றும் சிபிசிஐடி போலீசார் இதுவரை மேற்கொண்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் அளித்து, மதியம் 12:30 மணி வரை விசாரணையை ஒத்திவைத்து, நீதிபதி உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, ஜாமீன் மனு மீதான விசாரணை மதியம் 12.30 மணிக்கு மீண்டும் தொடங்கியது. அப்போது, ஜிப்மர் மருத்துவக் குழுவினரின் மறு கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள, மாணவியின் இரண்டு உடல் கூறாய்வு மருத்துவ அறிக்கை வந்த பின்புதான் எப்ஐஆர் நகலை எங்களால் சமர்ப்பிக்க முடியும் என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து, ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

கொலை மிரட்டல்..

மேலும் மாணவி மர்ம மரணம் தொடர்பாக, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனியாமூர் பள்ளி கணித ஆசிரியைக்கு, சேலம் மத்திய சிறையில் அச்சுறுத்தல் இருப்பதால், திருச்சி சிறைக்கு அவரை மாற்றக்கோரி, அவரது தந்தை ஜெயராஜ் விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் இன்று மனுத் தாக்கல் செய்துள்ளார். அம்மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

மாணவியின் தாயார் கூறுகையில், 30 நாட்களை கடந்தும் மர்மமான மரணத்திற்கு விடை கிடைக்கவில்லை. அடுத்தகட்ட நடவடிக்கையாக நான் முதலமைச்சரை நேரில் சந்தித்து முறையிட உள்ளேன் என்றார்.

இதையும் படிங்க:அதிமுக பிளவுக்கு திமுக தான் காரணம்: சசிகலா

ABOUT THE AUTHOR

...view details