விழுப்புரம்:கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் உள்ள பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியர் உட்பட ஐந்து பேர் ஜாமீன் கேட்டு நேற்று (ஜூலை 28) விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சாந்தி முன்னிலையில் இன்று (ஜூலை 29) நடைபெற்றது.
அப்போது நீதிபதி, "சின்னசேலம் காவல் நிலையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் ஜாமீன் கேட்கிறீர்கள். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், அவர்கள் எந்தெந்த பிரிவுகளில் தகவலறிக்கை பதிந்திருப்பார்கள் என்பது தெரியாது. ஆகவே சிபிசிஐடி பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையை சமர்ப்பித்து ஜாமீன் கோரலாம்.