விழுப்புரம்: கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு பணியிலிருந்த பெண் எஸ்பி-க்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி (சட்டம் - ஒழுங்கு) மீது புகார் எழுந்தது.
அந்த புகார் அளிக்க சென்ற பெண் எஸ்பி-யை தடுத்து நிறுத்தியதாக செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி மீதும் சிறப்பு டிஜிபி மீதும்விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இது தொடா்பான வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று (ஜன.3) நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின்போது, முன்னாள் சிறப்பு டிஜிபியும், முன்னாள் எஸ்பியும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதற்கான காரணங்களை அவா்களது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். மேலும், அரசு தரப்பில் சாட்சிகள் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வருகிற 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: காவல் நிலைய முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல்: திடுக்கிடும் தகவல்