தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா விழிப்புணர்வு பணியில் மக்கள் செல்வன் ரசிகர்கள் - கரோனா குறித்து மக்களிடையே விஜய்சேதுபதி ரசிகர்கள் ஏற்படுத்தினர்

கரோனா தொற்று குறித்து விஜய் சேதுபதி ரசிகர்கள் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் இறங்கியுள்ளனர்.

vijay Sethupathi fans
vijay Sethupathi fans

By

Published : Mar 20, 2020, 7:39 PM IST

உலகை அச்சுறுத்திவரும் கரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து அரசாங்கம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

கரோனா விழிப்புணர்வு பணியில் விஜய்சேதுபதி ரசிகர்கள்

இந்நிலையில் விஜய் சேதுபதியின் ரசிகர் நற்பணி இயக்கத்தை சேர்ந்தவர்கள் திண்டிவனத்தில் கரோனா குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு கிருமியை கட்டுப்படுத்தும் சானிடைசர், முகக்கவசம் உள்ளிட்டவை மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.

சாதி மதம் கடந்து மனிதர்களை நேசிப்போம் என்ற காதல் கருத்தை வலியுறுத்தி நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details