தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருநங்கைகள் கால்பதிக்காத துறையே இல்லை - நடிகர் சூரி

திருநங்கைகள் இல்லாத துறையே இல்லை, அவர்கள் கால் பதிக்காத இடமே இல்லை என நடிகர் சூரி கூறியுள்ளார்.

திருநங்கைகள் நீங்கள் கால்பதிக்காத துறையே இல்லை
திருநங்கைகள் நீங்கள் கால்பதிக்காத துறையே இல்லை

By

Published : Apr 18, 2022, 1:37 PM IST

2022ஆம் ஆண்டிற்கான மிஸ் கூவாகம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் சூரி பேசியாதாவது, ”திருநங்கைகள் இல்லாத துறையே இல்லை. நீங்கள் கால் பதிக்காத இடமே இல்லை.

ஆசிரியர், மருத்துவர், இராணுவம் காவல்துறை, அரசியல்வாதி, செவிலியர், ஓட்டுனர், வக்கீல், நீதிபதி என நீங்கள் கால் பதிக்காத துறையே இல்லை. ஓடி ஒளிந்த காலங்கள் எல்லாம் கடந்து விட்டது.

தான்ஒரு திருநங்கை என்று சொல்வதற்கே கூச்சப்பட்ட காலம் அப்போது. ஆம் நான் திருநங்கைதான் என நெஞ்சை நிமிர்த்தி சொல்லும் அளவிற்கு உங்கள் வளர்ச்சி உள்ளது. வேலூர் மாநாகராட்சியில் திருநங்கை ஒருவர் கவுன்சிலராக வெற்றி பெற்றார் என்ற செய்தி கேட்டு பெருமையாக உள்ளது என்றார்.

திருநங்கைகள் நீங்கள் கால்பதிக்காத துறையே இல்லை- நடிகர் சூரி

இதையும் படிங்க:டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் உயிரிழப்பு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

ABOUT THE AUTHOR

...view details