தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செஞ்சி கிளைச் சிறையில் விசாரணை கைதி தற்கொலை முயற்சி - விசாரணை கைதி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி

விழுப்புரம் செஞ்சி கிளைச் சிறையில் கைதி ஒருவர் பிணை கிடைக்காத காரணத்தால் மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செஞ்சி கிளை
செஞ்சி கிளை

By

Published : Jan 6, 2022, 6:31 PM IST

விழுப்புரம்: ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகுரு (21). குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதுசெய்யப்பட்டு 10 நாள்களாக செஞ்சி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் பிணை கிடைக்காத காரணத்தால் மன உளைச்சலில் இருந்த பாலகுரு நேற்று (ஜனவரி 5) மாலை சிறை அறையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து தகவலறிந்த சிறைக் காவலர்கள் பாலகுருவை மீட்டு, செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இச்சம்பவம் சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பஞ்சாப் பாதுகாப்பு குறைபாடு; குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு

ABOUT THE AUTHOR

...view details