விழுப்புரம்: திருமண நிகழ்ச்சிக்காக புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு மது பாட்டில்களை இரண்டு இளைஞர்கள் சட்ட விரோதமாக கடத்தி வந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் வந்த இருசக்கர வாகனம், கெங்கிராம்பாளையம் சோதனைச்சாவடி அருகே வந்து கொண்டிருந்தபொழுது, எதிரே வந்த நான்கு சக்கர வாகனம் இருசக்கர வாகனத்தின்மீது மோதியது.
இதில் இளைஞர் ஒருவருக்கு கால் முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்தார். அதேநேரம் கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள் சாலையில் சிதறியது. இந்நிலையில் இதுதொடர்பான வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.