திருப்பூரிலிருந்து ஐபிஎல் போட்டியைப் பார்ப்பதற்காக 7 பேர் காரில் சென்னைக்கு வந்தனர்.நேற்று ஐபிஎல் போட்டியைப் பார்த்தபின் அவர்கள் ஊர் திரும்பினர். கள்ளக்குறிச்சி அருகே சென்றுகொண்டிருந்தபோது லாரியின் பின்புறத்தில் அவர்களின் கார் மோதி விபத்துக்குள்ளானது. அதில் சம்பவ இடத்திலேயே சதீஷ், அருண்குமார், பாலமுருகன் ஆகியோர் உயிரிழந்தனர்.
ஐபிஎல் கிரிக்கெட் பார்த்துவிட்டு ஊர் திரும்பியபோது ஏற்பட்ட சோகம்! - Accident
விழுப்புரம்: சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியைப் பார்த்துவிட்டு காரில் ஊர்திரும்பியபோது கள்ளக்குறிச்சி அருகே ஏற்பட்ட லாரி விபத்தில் மூன்று பேர் பலியான சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம்
படுகாயமடைந்த கிருஷ்ணகுமார், சுனில், மகாலிங்கம், கண்ணதாசன் ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கிரிக்கெட் பார்த்துவிட்டு வீடு திரும்பியபோது விபத்தில் பலியான சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.