விழுப்புரம் வடக்கு மாவட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், பஞ்சமி நில மீட்பு 3ஆவது மாநாடு விழுப்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் முத்துகுமரன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு, தலித் மண்ணுரிமை கூட்டமைப்பின் நிறுவனர் நிக்கோலஸ் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைப் பொதுச்செயலாளர் கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம்! - theendamai olippu munnani
விழுப்புரம்: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் ஆணவக் கொலையைத் தடுக்க தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆணவ கொலைக்கு எதிராக தனிச்சட்டம்!
இதில், தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளைத் தடுக்க அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும், பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும், ஆணவக் கொலையைக் கண்டித்து மாநில முழுவதும் செப்டம்பர் 30ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.