தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருடச் சென்ற இடத்தில் ஊஞ்சல் ஆடிய திருடன் கைது - Police detained at the bus station

விழுப்புரம்: திருடச் சென்ற வீட்டில் ஊஞ்சலில் ஆடிய திருடனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சச்சிதானந்தம்

By

Published : Oct 9, 2019, 3:08 PM IST

விழுப்புரம் சுதாகர் நகரை சேர்ந்தவர் இளங்கோ(56). இவர் தென்பேர் அரசு பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மாதம் 18ஆம் தேதி இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் உறங்கியுள்ளார்.
அப்போது அவருடைய வீட்டிற்குக் கொள்ளையடிக்க வந்த ஒருவர், வீட்டின் 2ஆவது மாடியில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்ந்து சிறிது நேரம் ஆனந்தமாக ஆடினார். இந்த காட்சி, அந்த வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.

ஊஞ்சலில் ஆடும் சச்சிதானந்தம்

இது குறித்து ஆசிரியர் இளங்கோ கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், விழுப்புரம் வி.மருதூர் பகுதியைச் சேர்ந்த சச்சிதானந்தம் (32) என்பதும், கொள்ளையடிப்பதற்காக ஆசிரியர் இளங்கோ வீட்டில் புகுந்ததும், அங்கு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் திருட முயன்றபோது நாய் குரைத்துள்ளது. அதற்கு பயந்து வீட்டின் மாடிக்குச்சென்றவர் அங்கிருந்த ஊஞ்சலில் சிறிது நேரம் ஆடிவிட்டு அங்கிருந்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து சச்சிதானந்தத்தை காவல் துறையினர் வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெளியூருக்குத் தப்பிச்செல்ல முயன்றபோது அவரை காவல் துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details