விழுப்புரம்:கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சார்பில் கடந்த ஒரு ஆண்டாக நடத்தப்பட்ட மதுவிலக்கு சோதனையில் வெளிமாநிலங்களில் இருந்து மதுபானங்களை கடத்தி வந்த ஏராளமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்கள் அனைத்தும் மரக்காணம் போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும் இன்று (நவ.9) ஏலம் விடப்படும் என்று முன்னரே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன்தொடர்ச்சியாக கோவை, சென்னை, புதுச்சேரி மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் வாகனங்களை ஏலத்தில் எடுப்பதற்காக முன்பணம் கட்டி இருந்தனர்.
திட்டமிட்டபடி இன்று காலை காவல்துறை உயர் அலுவலர்களின் முன்னிலையில் ஏலம் தொடங்கியது. இந்த ஏலத்தில் 24 கார்கள், 4 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 28 வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. அப்போது ஒரு கார் ஏலத்திற்கு வந்தது. அந்த காரின் பின் கதவை திறந்து பார்த்தபோது, பிளாஸ்டிக் வாளி ஒன்றில் மண்டை ஓடு இருந்ததைக் கண்டு ஏலத்திற்கு வந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.