விழுப்புரம்: மாவட்டத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. தலைமையில் குழுவின் உறுப்பினர்களான எம்.எல்.ஏக்கள் ஜவாஹிருல்லா, வேல்முருகன், டாக்டர் சரஸ்வதி, சிந்தனைச்செல்வன், பூண்டி கலைவாணன், சட்டமன்ற பேரவை செயலாளர் சீனுவாசன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது பேசிய செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ ஆய்வில் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் விழுப்புரம் ஆவின் நிறுவனத்திற்கு ரூ 38.94 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சட்டமன்ற பொதுக்கணக்கு குழுத்தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ தெரிவித்தார்.
அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 2018-19ஆம் ஆண்டில் ஆவின் நிறுவனத்துக்காக வாங்கப்பட்ட கருவிகள் , உபகரணங்களை சரியான நேரத்தில் பயன்படுத்தப்படாததால் ரூ 26 கோடியே 88 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனவும் மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய மானியம் வராத வகையில் ரூ 11 கோடியே 52 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.