தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 18, 2022, 8:14 PM IST

ETV Bharat / state

விழுப்புரத்தில் கி.மு 8 முதல் 9 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட கொற்றவை தேவி சிலை கண்டுபிடிப்பு

விழுப்புரத்தில் கி.மு 8 முதல் 9 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட கொற்றவை தேவி சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிலை கண்டுபிடிப்பு
சிலை கண்டுபிடிப்பு

விழுப்புரம்:நேமூர் கிராமத்திலுள்ள ஏரிக்கரையில் வரலாறு மற்றும் விழுப்புரம் மாவட்ட பண்பாட்டு பேரவை ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் மற்றும் திருவாமத்தூர் சரவணகுமார் ஆகியோர் கடந்த ஜூலை 16ஆம் தேதி மேற்கொண்ட கள ஆய்வில் அங்கு கொற்றவை சிற்பம் இருப்பது கண்டறியப்பட்டது.

நேமூர் ஏரிக்கரையில் பழமையான சிற்பம் காணப்படுவதாக முத்து என்கிற உள்ளூர்வாசி தகவல் அளித்தார். தொடர்ந்து செய்யப்பட்ட கள ஆய்வில் வன துர்க்கை என வணங்கப்பட்டு வந்த பல்லவர் காலத்தை சேர்ந்த கொற்றவை சிற்பம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. கொற்றவை வழிபாடு என்பது தமிழ்நாட்டின் மிகவும் பழமையான மற்றும் தொன்மையான வழிபாட்டு நெறிமுறையாகும்.

கொற்றை தேவி சிலை கண்டுபிடிப்பு

சிலப்பதிகாரத்தில், கொற்றவை தெய்வம் பற்றிய காட்சிகளை நம் கன் முன்னே வந்து செல்வதாக அந்நூலில் இளங்கோவடிகள் விவரித்திருப்பார். பாய்ந்தோடி வரும் மானை போன்று மிகவும் வேகமாக செயல்படுவாள் இந்த கொற்றவை தேவி; எதிரிகளை துவம்சம் செய்யும் காளியின் ஓர் அவதாரமாக கருதப்படுபவள்.

கொற்றவை தேவி சிலை என்பது இதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்று குறிப்புகள் ஆகட்டும்; தற்போது வரை கண்டுபிடிக்கப்பட்டு வரும் வரலாற்று குறிப்புகள் ஆகட்டும், கி.மு 8 முதல் 9ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட சிலப்பதிகாரம் எழுதப்பட்ட காலத்திற்கு முன் வாழ்ந்த ஒரு வீர பெண்ணின் வரலாற்றை குறிக்கும் ஒரு செயலாக இது குறிப்பிடப்படுகிறது.

தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொற்றவை தேவியின் சிலையில் அவரை பூஜை செய்வதாக கீழே இரண்டு கண்மாய் கல்லும் சிலைக்கு அருகில் ஆறுமுகம் கொண்ட தமிழ் கடவுள் முருகன் சிலையும் வடிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் பிரதான சிலைகளுக்கும் தமிழனின் முந்தைய தொண்டு பட்ட வரலாற்றுக்கும் செஞ்சி கோட்டை ஒரு சான்றாக விளங்குகிறது. காளியின் மறுஅவதாரமாக வன துர்க்கை அம்மன் செஞ்சியிலும் மற்றும் கொற்றவை தேவி சிலை நேமூர் கிராமத்திலும் மற்றும் காளி மாதா கோயில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே காட்டுப்பகுதியில் காணப்படுகிறது.

தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு தொல்லியல் துறையும் நேமூர் பகுதியில் மேற்கொண்டு அகழ்வாராய்ச்சி மேற்கொண்டால் கொற்றவை தேவி சிலையை போன்று பல புராதான சிலைகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக, இந்த சிலையை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: திருவண்ணாமலை அருகே 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த 10 சிலைகள் திருட்டு!

ABOUT THE AUTHOR

...view details