விழுப்புரம்:பிரம்மதேசம் அருகே நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரின் மனைவி விசாலாட்சி. இந்நிலையில் விசாலாட்சி என்பவருக்கும் இவர்கள் குடியிருப்புக்கு அருகே உள்ள மேட்டுத்தெருவை சேர்ந்த ஏழுமலை மகன் முருகன் என்பவருக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளாக திருமணம் மீறிய உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இவர்களின் இத்தகைய தவறான உறவு முறையானது ஊர் மக்கள் மற்றும் உறவினர்களிடையே தெரிய வந்து போது பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, விசாலாட்சி, முருகனுடனான உறவை திடீரென முறித்துக் கொண்டுள்ளார். இதை, ஏற்றுக்கொள்ள முடியாத முருகன் கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி இரவு, விசாலாட்சியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது நகர் கிராமம் ஆலமரம் அருகே குப்பை கொட்டும் இடத்திற்கு வரும்படி கூறி மிரட்டியதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த விசாலாட்சி, வேறு வழியில்லாமல் கையில் மண்ணெண்ணெய் கேனுடன் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே பேச்சு வார்த்தை முற்றி கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "வறட்சியால் கருகிய பனை மரங்களை மீட்க நடவடிக்கை" - எம்பி கனிமொழி உறுதி!