விழுப்புரம் மாவட்டம் குயிலாப்பாளையம் மார்க்கெட் தெருவைச் சேர்ந்தவர் வாஞ்சிநாதன் (20). இவர் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்துவருகிறார்.
இவருக்கும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் (24) என்பவருக்கும் பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் வாஞ்சிநாதன் புதிய செல்போன் வாங்கி வைத்துள்ளதாக சந்தோஷிடம் தெரிவித்தார்.
அதை வாங்க வாஞ்சிநாதன் கூறியபடி மாட்டுக்காரன் சாவடி பகுதிக்கு சந்தோஷ் வந்தார். அப்போது பதுங்கியிருந்த வாஞ்சிநாதன் தனது நண்பர்களுடன் சேர்ந்து சந்தோஷ் அணிந்துவந்த செயின், அவரிடமிருந்த 2000 ரூபாய் ஆகியவற்றைப் பறித்துச் சென்றார்.
இது குறித்து சந்தோஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வாஞ்சிநாதன் உள்பட மூன்று பேரை கைதுசெய்த காவல் துறையினர் செயின், 2000 ரூபாயை பறிமுதல்செய்தனர்.
இதையும் படிங்க: போதை மருந்துக்காக மருந்துக்கடைகளில் திருடிய இளைஞர் கைது