தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆசிரியரை அடித்த மாணவன் மீது வழக்கு - விழுப்புரத்தில் நடந்தது என்ன?

விழுப்புரம் அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியரை கொடூரமாக தாக்கிய மாணவன் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியரை அடித்த மாணவன் மீது வழக்கு - விழுப்புரத்தில் நடந்தது என்ன?
ஆசிரியரை அடித்த மாணவன் மீது வழக்கு - விழுப்புரத்தில் நடந்தது என்ன?

By

Published : Nov 17, 2022, 12:27 PM IST

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். பள்ளிக்கு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவன் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அடிக்கடி மதுகுடித்துவிட்டு தன்னுடன் படிக்கும் மாணவிகளை கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக தலைமை ஆசிரியர் சேவியர் சந்திரசேகர், அந்த மாணவனை அழைத்து கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவன், புதன்கிழமையன்று மதுகுடித்துவிட்டு வந்து தலைமை ஆசிரியர் அறையில் இருந்த சேவியர் சந்திரசேகரன் தலையில் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த தலைமை ஆசிரியர் அரியூர் ஆரம்ப சுகாதார நிலையில் சிகிச்சை பெற்றார்.

இச்சம்பவம் குறித்து விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து உடனடியாக விசாரணை மேற்கொண்ட விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலர்கள் மாணவன் விக்னேஷ் மற்றும் அவனுடைய பெற்றோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

பாதிக்கப்பட்ட தலைமை ஆசிரியர்

அதனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து சம்பந்தப்பட்ட மாணவனை பள்ளியில் இருந்து ஒருவாரம் சஸ்பெண்ட் செய்ய முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார். மேலும், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது மற்றும் மாணவிகளை கேலி செய்தது ஆகிய பிரிவுகளின் மாணவன் மீது கண்டமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது 18 வயதுக்கு உட்பட்ட சிறுவன் என்பதால் விழுப்புரம் இளம் சிறார் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படும் என கூறினர்.

மேலும் படிக்க: பேஸ்புக்கில் பழக்கம்... ஒரு தலை காதல்... கேரள பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

ABOUT THE AUTHOR

...view details