தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விழுப்புரத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்து சேதம்! - Incident of sudden car fire

விழுப்புரம் அருகே வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மகேந்திரா சைலோ கார் திடீரென தீப்பற்றி எரிந்த நிகழ்வால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

விழுப்புரத்தின் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்- திடீரென தீப்பற்றி எரிந்து சேதம்!!
விழுப்புரத்தின் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்- திடீரென தீப்பற்றி எரிந்து சேதம்!!

By

Published : Oct 24, 2022, 5:22 PM IST

விழுப்புரம்:செஞ்சி அருகே பரந்தன்தாங்கள் பகுதியைச்சேர்ந்த மின்வாரிய ஊழியர், ஏழுமலை. அவரின் மகேந்திரா சைலோ கார் ஆனது திடீரென தீப்பற்றி எரியத்தொடங்கியது. தீ விபத்து குறித்து செஞ்சி தீயணைப்பு போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

நேற்று மாலை வெளியே சென்றுவிட்டு வந்து தனது வீட்டிற்கு முன் காரை நிறுத்தியுள்ளார், ஏழுமலை. இந்நிலையில் தீபாவளி பண்டிகையான இன்று(அக்.24) காருக்கு அருகே சிலர் பட்டாசுகள் வெடித்ததாகத் தெரியவருகிறது. இதனிடையே அதனால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது தீ விபத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்கிற கோணத்தில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:வெறிச்சோடிய சென்னை... 12 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்...

ABOUT THE AUTHOR

...view details